முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் 38 ஆயிரம் ராணுவ வீரர்கள் உடல் பருமனால் அவதி

திங்கட்கிழமை, 23 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன்.24 - உலக அளவில் இங்கிலாந்து ராணுவம் ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. ஆனால், தற்போது அதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது. இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுமார் 38 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் போதிய உடல் தகுதி இன்றி அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணுவத்தில் ஆண்டுக்கு இருமுறை ராணுவ வீரர்களுக்கு உடல் தகுதி திறன் சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடல் திறன் தகுதி தேர்தவில் தோல்வி அடைந்தனர். மேலும் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்.

ஓட்ட பந்தயம், தண்டால் உள்ளிட்ட உடல் தகுதி சோதனைகளை நடத்திய போது கடந்த 2011-ல் இருந்து 2014 வரை 29,600 ஆண் வீரர்களும், 2,819 பெண் வீரர்களும் தேர்வில் தோற்றுள்ளனர். மேலும் 22 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் உள்ளன். இதனால் உடல் எடையுள்ள ராணுவ வீரர்களுக்கு உடல் எடையை குறைக்க பச்சை காய்கறிகள், கொழுப்பு சத்து குறைவான உணவு வகைகள் போன்றவை வழஙகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்