முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கரடியிடம் இருந்து சிறுவனை காப்பாற்றிய நாய்

புதன்கிழமை, 25 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜூன் 26 - நாய் உள்ளிட்ட செல்ல வளர்ப்பு பிராணிகள் தங்களது எஜமானர்களிடம் விசுவாசமாக இருக்கும். சில நேரங்களில் எதிரிகளிடம் இருந்தும் அவர்களை சாதுரியமாக காப்பாற்றி உள்ளன. அது போன்று கரடியிடம் இருந்து தனது 5 வயது எஜமானரை வளர்ப்பு நாய் காப்பாற்றி உள்ளது. ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு.

சம்பவத்தன்று இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டான். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு கரடி அவனை தாக்க பாய்ந்து வந்தது. அதை பார்த்த நாய் வழக்கத்தை விட சப்தமாக குறைத்தது. இதனால் உஷாரான சிறுவன் கரடி வருவதை பார்த்து விட்டான். உடனே பாதுகாப்பான இடத்துக்கு ஓடி வந்து கரடியின் தாக்குதலில் இருந்து தப்பினான். அதன் பின்னரும் அந்த நாய் விடவில்லை. குறைத்து கரடியை காட்டுக்குள் விரட்டியடித்து விட்டு தன் எஜமானரிடம் திரும்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்