முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா - ராகுலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

புதன்கிழமை, 2 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 3 - காங்கிரஸ் கட்சி பத்திரிகை விவகாரத்தில் வருமான வரி தொடர்பாக சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான நேஷனல் ஹெரால்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த பத்திரிகையின் சொத்துக்களை வாங்க கட்சி நிதியை பயன்படுத்தியதாக சமீபத்தில் சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சோனியா, ராகுலுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி மீளாய்வு தொடர்பாகவும் புகார் எழுந்துள்ளது. சொத்துக்கள் பரிமாற்றம் செய்த போது வருமான வரி விலக்கு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வியிடம் கருத்து கேட்டதற்கு, அது போன்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பினால் பா. ஜனதா அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்