முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - ஜெர்மனி பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-ஜெர்மனி பலப்பரிட்சை

ரியோடி ஜெனிரோ, ஜூலை.12 - கடந்த மாதம் தொடங்கிய உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டி

நாளை நள்ளிரவு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அர்ஜென்டினா-ஜெர்மனி மோதுகின்றன.இந்த போட்டி ரியாடி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை தோற்கடித்தது. 2-வது அரையிறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி கிக்கில் 4-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்ததி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியை நடத்தும் பிரேசில் அரையிறுதியில் பிரேசிலிடம் படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக விலகியது பிரேசில் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நெதர்லாந்து அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக போராடி தோல்வியை தழுவியது.

ஜெர்மனி அணி முதலாவது வரிசையில் உள்ள பிரேசில் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவுக்கு சவாலாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அர்ஜென்டினாவின் விளையாட்டு நுட்பத்தை மெஸ்சி கேப்டன்சிப் மாற்றியிருப்பதால் இந்த அணி மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கு முன்பாக உலக கோப்பை கால்பந்து இறுதியில் 2 முறை மோதியுள்ளன. 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கேல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. அதே போல் 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பழி தீர்த்ததுக் கொண்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இறுதிப்போட்டியில் 3-வது முறையாக மோதும் இந்த இரண்டு அணிகளுமே தங்களது முழு திரமையையும் காண்பிக்க போராடுவார்கள். உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஜெர்மனி 1954, 1974 மற்றும் 1990 என மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அர்ஜென்டினா இதுவரை 1978 மற்றும் 1986 என இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
24-ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தோடு கடுமையாக போராடும். அதே நேரத்தில் தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஜெர்மனி இந்த கோப்பையை வென்றால் தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்