முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.சுவாமிநாதன் - சாய்னா நெவாலுக்கு விருது

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை.16 - புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பிரபல இறகுப் பந்து வீராங்கனை சாய்னா நெவால் ஆகியோருக்கு ஐதராபாதில் இயங்கி வரும் மித வெப்ப மண்டல பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் நல்லெண்ணத் தூதர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

ஐதராபாதில் ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் சாய்னா நெவால் ஆகியோருக்கு அந்த நிறுவனத்தின் பொது இயக்குநர் வில்லியம் டி.டார் இந்த விருதுகளை வழங்கினார். இந்த விருது குறித்து சாய்னா நெவால் கூறியதாவது: இந்த விருதானது எனக்கு கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு வேளாண் துறை குறித்து பிரசாரம் செய்வேன் என்றார்.

ஐதராபாதில் ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி. நிறுவனம் அமைய எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு காரணமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்