ஆப்கனில் வரிசையாக நிற்க வைத்து 15 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ஹெராத், ஜூலை.27 - ஆப்கானிஸ்தானில் 2 வாகனங்களில் சென்றவர்களை இடையில் மறித்து இறக்கி சாலையோரத்தில் வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் தலிபான் தீவிரவாதிகள்.

11 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை ஆகியோர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்ற அனைவரையும் நெஞ்சுப் பகுதியிலும் தலையிலுமாக குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கோர் மாகாண காவல்துறை தலைவர் உறுதி செய்தார். தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த கொடிய சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்றும் கூறினார்.

தலிபான்கள் இதுவரை இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை. பொதுமக்களை நாங்கள் எப்போதும் கொல்வது இல்லை என்றே அவர்கள் மறுப்பு தெரிவிப்பது வழக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: