காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூலை.27 - ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்லன்வல்லா என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 10:10 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. கடந்த 7 மணி நேரத்தில் 2-வது முறையாகவும், ஜூலை மாதத்தில் 8-வது முறையாகவும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: