முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபர் விரைவில் இந்தியா வருகை

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பீஜிங், ஆக.05 - சீன அதிபர் ஜின்பிங் விரைவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, பாகிஸ்தானைச் பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்தியில், சில பெரிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜீ ஜின்பிங் இந்த மாதத்தில் இஸ்லாமாபாத் வருவதாகத் தெரிவித்திருந்தார். எனினும், பீஜிங்கில் சீன அரசு அதிகாரிகள் கூருகையில் பாகிஸ்தானுக்கு அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அவர் இந்தியா, இலங்கைக்குச் செல்வார் என்றும் தெரிவித்தனர். அவர் சீன அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்திய வர உள்ளார்.

இதனிடையே, உலகிலேயே மிகவும் நிண்டதூர பாய்ந்து செல்லக்கூடிய, அதிநவீன, கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கைத் தாக்கக் கூடிய டிஎஃப்-41 ஏவுகனையை சீனா உருவாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்