முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ: இந்திய தம்பதி கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், ஆக.09 - சிங்கப்பூரில் சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவை இந்தியத் தம்பதி கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து தி ஸ்டிரெய்ட் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய தம்பதி ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி பிரணோதியும் 6 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து நிமிடத்துக்கு ஒரு சப்பாத்தி தயாரிக்கும் வகையில் ரோட்டிமடிக் என்ற ரோபோ இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இது அமெரிக்க சந்தையில் அடுத்தாண்டு விற்பனைக்கு வரவுள்ளது.

இதில் ஒரே நேரத்தில் 17 கிலோ மாவு கொண்டு Xளிமையாக சப்பாத்தி தயாரிக்கலாம். இந்த இயந்திரம் மோட்டார்கள், 15 சென்சர்கள் உள்ளிட்ட 300 பகுதிகளை கொண்டது. ரோபோவின் விலை 599 டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,718 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்