முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் - விதைகள்

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.09 - காரிப் பருவ சாகுப்படியை பாதுகாக்கும் பொருட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உல்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல், விதைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியதாவது:

இதுவரை எந்த மாநிலமும், வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகள் போதிய மழையில்லாமல் பாதிக்கப்ப்டடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 50 சதவீதம் அளவுக்கு மழையில்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு விசாயப் பணிகளுகக்ு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. நாட்டின் எந்தப் பகுதியில் மழையின் அளவு 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறித்து வானிலை மையங்களின் அறிக்கையைக் கொண்டு தெளிவாக அறியமுடியவில்லை. இருப்பினும் 520 மாவட்டங்களுக்கான அவசர கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளுக்கான மானியத்தின் அளவு, 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. மேலும், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு உதவியாக ஹெக்டேருக்கு ரூ.35,000 வழங்கப்படும். தீவனப் பயிர் வளர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படும் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.100 கோடி வழங்குவதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்ரு ராதா மோகன் சிங் தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டுகளில் வறட்சியால் நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டபோது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என அறிவித்தது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் தற்போது அறிவித்துள்ளது. இந்த மானியத்தை மத்திய மாநணில அரசுகள் சரி சமமாக பகிர்ந்து கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்