முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

சியோல், ஆக.16 - தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர்கள் சங்க மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் 2 இந்திய வம்சாவளி கல்வியாளர்களுக்கு கணிதவியல் துறையில் உயர்ந்த பரிசு வழங்கப்பட்டது.

இதில், கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளி பேராசிரியர் மஞ்சுல் பார்கவாவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 1974-ம் ஆண்டு கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியினரான மஞ்சுல் பார்கவா, அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. வடிவகணிதம், அரித்மெட்டிக் மற்றும் அல்ஜீப்ராவில் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்த தற்காக பார்கவாவுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரிய ராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுபாஷ் கோட்டுக்கு ரோல்ப் நெவான்லினா விருது வழங்கப்பட்டது. கணித விளையாட்டில் புதிய உத்திகளையும் வழிமுறை களையும் கோட் தனது ஆய்வில் விளக்கியுள்ளார்.

கணிதத்துறை நோபல் ஃபீல்ட்ஸ் பதக்கம் கணிதத்துறை யில் வழங்கப்படும் நோபல் என அழைக்கப்படுகிறது. இவ்விருது சர்வதேச கணித வியலாளர்கள் சங்கத்தால் நான்காண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்