இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, ஆக.18 - நேற்று அதிகாலை இந்தியா எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் திருப்பி தாக்கி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி பாகிஸ்தான் இந்தியாவுடன் மறைமுக போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தும் பேசினார். என்றாலும் அதன்பிறகும் பாகிஸ்தான் தாக்குதல் நீடிக்கிறது. பாகிஸ்தான் படைகள் இன்னும் அத்துமீறலில் ஈடுபட்டது. காஷ்மீற் மாநிலம் ஜம்மு அருகே ஆர்.எஸ்.புரா என்ற இடத்தில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது பாகிஸ்தான் துப்பாக்கியால் சுட்டது.

உடனே இந்திய வீரர்கள் திருப்பி சுட்டார்கள். இருதரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதன்பிறகு பாகிஸ்தான் படைகள் பின்வாங்கியது. இதனால் எல்லைப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: