முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் 2 இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வெலிங்டன், செப்.24 - நியூசிலாந்தில் இந்திய வம்சாவளி தலைவர்கள் இருவர் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகேஷ் பிருந்தா, பரம்ஜீத் பார்மர் என்ற இந்த இருவரும் புதிய எம்.பி.க்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல் நியூசிலாந்து ஹெரால்ட் நாளேட்டில் நேற்று வெளியாகியுள்ளது. இதில் பரம்ஜீத் பார்மர், ஆளும் தேசிய கட்சி சார்பிலும் மகேஷ் பிருந்தா, நியூசிலாந்து முதல் கட்சி சார்பிலும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் பிரதமர் ஜான் கீ தலைமையிலான தேசிய கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. கடந்த 2011 தேர்தலில் இக்கட்சி 47.31 சதவீத வாக்குகள் பெற்றது. தற்போது இதன் வாக்கு சதவீதம் 48.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை 59-ல் இருந்து 61 ஆக உயர்ந்துள்ளதால் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்