முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா கொடுத்த பதிலடியில் 15 பாகிஸ்தானியர்கள் பலி

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக் 9:

காஷ்மீரில் இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை முகாம்கள் மட்டுமல்லாது, கிராமங்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தியது. கடந்த இரு தினங்களுக்கு முன் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராம மக்கள் 5 பேர் பலியானார்கள்.  50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறல் எல்லை மீறி செல்வது இந்தியாவை ஆத்திரம் அடைய செய்தது. தூதரக அளவில் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பாகிஸ்தானின் தாக்குதல் நேற்று முன்தினமும் நீடித்தது. இதையடுத்து ராணுவ மந்திரி அருண்ஜெட்லி முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் குறித்து மந்திரியிடம் ராணுவ தளபதிகள் விளக்கி கூறினார்கள். எல்லையில் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்தும் எடுத்து கூறினார்கள். இதையடுத்து எல்லை பகுதி மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் இந்திய படைகள் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. நேற்று முன்தினம் பாகிஸ்தானின் 37 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகள் மீது இந்தியா கடுமையான எதிர்தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பாகி்ஸ்தானின் தரப்பில் 15 பேர் பலியானதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் உளவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் ஏராளமான பதுங்கு குழிகள் குண்டுவீசி அழிக்கப்பட்டன. எல்லையில் இந்தியா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள், 1 5பேர் பலியானது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்தது போர் நிறுத்தத்தை இந்தியா மீறுவதாக கூறி கண்டனத்தை தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் ஜம்மு, சம்பா, குத்வா மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் நேற்றும் தாக்குதல் நடத்தியது. இங்கு 200 கி.மீ நீளத்துக்கு சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படைகள் தானியங்கி துப்பாக்கியாலும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 6 4 இடங்களில் இந்திய படைகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மீதும் எறிகுண்டுகளை வீசியது. இதில் சம்பா மாவட்டம் சில்யாரி கிராமத்தில் 70 வயது பெண் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.  எல்லையில் தாக்குதல் நீடிப்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் சமாதான கொடி அணிவகுப்பு கூட்டத்தை இந்தியா ரத்து செய்து விட்டது. பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தாத வரை அந்த நாட்டுடன் எந்த சமாதான பேச்சுக்கும் இடமில்லை என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்