முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாழ்ப்பாணத்துக்கு ரயில் சேவை

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, அக்.09 - இந்திய உதவியுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நிகழ்ந்து வந்ததால் சுமார் 25 ஆண்டுகளாக இந்த ரயில்வே சேவை முடங்கி இருந்தது. வரும் அக்டோபர் 13-ம் தேதி முதல் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயில் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே செல்ல இருக்கிறது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிஓஎன் இந்த ரயில் சேவைக்கான தண்டவாளங்களை மறுசீரமைப்பதில் முக்கியப் பங்காற்றியது. இந்தியாவில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் 400 பேர் சென்று உதவினர். சுமார் 4 ஆண்டுகளில் இப்பணி நிறைபெற்றுள்ளது. இது இலங்கையின் தெற்கு – வடக்கு இடையே உள்ள 339 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

இது இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாகும். இதற்காக இந்தியா சுமார் ரூ.480 கோடியை கடன் உதவியாக அளித்தது. இந்த ரயில் பாதையை இலங்கையின் வடக்கு முனையான காங்கேசன்துறை வரை நீட்டிக்கும் பணி அடுத்தகட்டமாக நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்