முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செயற்கை ரோபோ கை

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக் 13 - கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை முறையில் தயாரித்து அவற்றை பொருத்துகின்றனர். ஆனால் அவை மற்ற உடல் உறுப்புகளுடன் இணைந்து இயற்கையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது. ஆனால் சுவீடனின் கோதன் பர்க், சால்மார்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானி மாஸ் ஆர்டிஷ் கடாலன் செயற்கை கை தயாரித்துள்ளார். இது ரோபோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள துண்டிக்கப்பட்ட கையுடன் இணைந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்த கையை மாக்னஸ் என்ற லாரி டிரைவருக்கு பொருத்தியுள்ளனர். விபத்தில் அவர் தனது வலது கையை இழந்தார். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள ரோபோ கை மூலம் அவர் லாரி ஓட்டுகிறார். வீட்டில் தனது அன்றாட வேலைகளை செய்கிறார். இந்த செயற்கை கோ மி்ன் முனைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தப்படும் பகுதியி்ல் உள்ள தோல் மேற்பரப்பில் ஊடுருவி நரம்பு மண்டலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மூளைக்கு தெரிவிக்கின்றன. ரோபோ கை பொருத்தி தனக்கு மீண்டும் வாழ்வளித்த விஞ்ஞானிகளுக்கு மேக்னஸ் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வகையான ரோபோ கை பொருத்தப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்