முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் சிறுமியை கற்பழித்த மதகுருவுக்கு ஜெயில்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

கா பூல், அக் 28 - ஆப்கானிஸ்தானில் சிறுமியை கற்பழித்த மதகுருவுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் காபூல் பகுதியை சேர்ந்தவர் முகமது அமினுல்லா பரேஷ் மதகுருவாக இருந்தார். அவர் தன்னிடம் கல்வி பயில வந்த 11 வயது சிறுமியை கற்பழித்தார். தொடக்கத்தில் இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவ ந்தது. எனவே மதகுருவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கற்பழிப்பு விவகாரம் வெளியே தெரிந்து விட்டதால் சிறுமியை கொலை செய்ய போவதாக அவளது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தனர். எனவே சிறுமியை பெண்கள் அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே மதகுரு முகமது அமினுல்லா மீது காபூ ல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் முகமது அமினுல்லாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒரு பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்த 5 பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இச்சம்பவம் நடந்து சிறிது நாளில் வெளியான இந்த தீர்ப்பு ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்