முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாரபட்சமாக செயல்படுவதாக இலங்கை குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ.03 - ஐ.நா. சபை பாரபட்சமாக செயல்படுகிறது என்று இலங்கை மூத்த அமைச்சர் கெகிலிய ரம்புக்வெல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

2006 ஜனவரி 2-ம் தேதி திரிகோணமலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 தமிழ் மாணவர்களை இலங்கை சிறப்பு அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. ஆனால் இதனை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்தது. 5 மாணவர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்து அவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் அரசு விளக்கமளித்தது. ஆனால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகின. அவற்றில் 5 மாணவர் களும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பது உறுதியானது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்புக் குழு அண்மையில் விசாரித்து இலங்கை அரசுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை ஏற்க மறுத் துள்ள மூத்த அமைச்சர் கெகிலிய ரம்புக் வெல்லா கூறியதாவது: விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை ஐ.நா. சபை கண்டுகொள்வதே இல்லை. அதேநேரம் இலங்கை அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை சுமத்தி வருகிறது. 2006-ம் ஆண்டில் திரிகோணமலையில் 5 மாணவர்கள் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் ஐ.நா. சபை அளித்துள்ள அறிக்கை பாரபட்ச மாக உள்ளது.

ஐ.நா. சபை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வில்லை. 1990-ம் ஆண்டில் 700 போலீஸ்காரர்களை விடுதலைப் புலிகள் கொன்றதை ஐ.நா. சபை ஏனோ மறந்து விடுகிறது. இதுபோல் விடுதலைப் புலி களால் நிகழ்த்தப்பட்ட 101 மனித உரிமைகளை என்னால் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அவற்றை ஐ.நா. சபை கண்டுகொள்வது இல்லை. இதன்மூலம் ஐ.நா. சபை பாரபட்சமாக செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்