முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வீடியோகளை குழந்தைகளிடம் காட்டும் ஐ.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்தான்புல், நவ.05 - பிணைக் கைதிகளின் தலையை கொய்து படுகொலை செய்யப்படும் வீடியோ பதிவுகளை, சிறுவர்களிடம் கட்டாயப்படுத்திப் பார்க்க வைப்பதாக ஐ.எஸ். இயக்கத்தினர் மீது மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அங்கிருக்கும் நகரங்களை தங்கள் வசப்படுத்தி அம்மக்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.

குறிப்பாக குர்து இன சிறுவர்களை அவர்கள் பலவிதங்களில் தங்களது இயக்கத்தில் இணைப்பது போன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதுவரை அந்த அமைப்பு சுமார் 150 சிறுவர்களை கடந்த 6 மாதங்களில் மட்டும் கடத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் 4 பேரை தேர்வு செய்து அவர்களிடம் ஐ.எஸ். நடத்திய விதம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கேட்டறிந்துள்ளது. அதில் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தினமும் 5 முறை தொழுகை மேற்கொள்ள வேண்டும், மத போதனைகளை தீவிர கட்டாயத்தோடு பின்பற்ற அவர்கள் வற்புறுத்துப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த பிணைக் கைதிகள் கடத்தப்பட்டு தலை கொய்து படுகொலை செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை சிறுவர்கள் பார்க்க கட்டாயப்படுத்தியதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீட்கப்பட்ட சிறுவன் கூறும்போது, "அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் எங்களை அடிப்பார்கள். அவர்கள் எப்போது பச்சை நிற ஹோஸ் அல்லது தடியான ஒயர்களால் செய்யப்பட்ட சவுக்கில் அடிப்பார்கள். எந்த காரணம் சொன்னாலும் கேட்கமாட்டார்கள், அவர்கள் எங்கள் உள்ளங்கால்களின் மீதும் அடித்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்