முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் வார இறுதியில் தரிசன டோக்கன்கள் ரத்து

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, நவ 6 - திருமலையில் வார இறுதி விடுமுறை நாட்களான சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் திவ்ய தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீ னிவாசராஜூ தெரிவித்தார்.

திருமலையில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகம் உள்ளது. இதனால் சுவாமி தரிசனத்துக்காக ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நடைபாதை வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதே வேளையில் நடைபாதை மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் வழங்கப்படும். இதனிடையே தி ருமலையில் வேற்று மத பிரசாரம் செய்வது அதிகரித்து வருவதால் திருமலையில் வசித்து வந்த வேற்று மத தேவஸ்தான ஊழியர்களின் குடும்பங்கள் திருப்பதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திங்கள்கிழமை 4 குடும்பங்களும், செவ்வாய் கிழமை 8 குடும்பங்களும் திருப்பதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் திருமலையில் வேற்று மத பிரச்சாரம் செய்வதை முற்றிலும் ஒழிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனி திருப்பதி அலிபிரிசோதனை சாவடிக்கு வரும் வாகனங்களில் வேற்று மத சின்னங்களோ, குறிகளோ இருந்தால் அந்த வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்