முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி வேன் விபத்தில் 18 பேர் பலி

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, நவ.07 - எகிப்தில் பள்ளி வேன் ஒன்று டேங்கர் லாரியுடன் மோதியதில் அதில் பயணித்தவர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கெய்ரோ நகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் வடக்கே உள்ள தமன்ஹூர் எனும் இடத்தில் நேற்று பள்ளி வாகனம் ஒன்று டேங்கர் லாரியுடன் மோதியது. அப்போது வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களில் எத்தனை பேர் பள்ளிக் குழந்தைகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.சமீபத்தில் பெய்த கனமழையால் பள்ளி வாகனம் சறுக்கி நிலைதடுமாறி அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாகாண ஆளுநர் முஸ்தபா ஹதூத் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்