முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றார்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பிரிஸ்பேன், நவ 1 5 - பிரதமர் மோடி மியான்மர் சுற்றுப்பயணம் முடிந்து ஆஸ்திரேலியா போய்ச் சேர்ந்தார்.

பிரதமர் மோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜிதீவு ஆகிய நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மியான்மர் புறப்பட்டு சென்றார். ஒய்பீதா நகரில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் உலக தலைவர்களும் பங்கேற்றனர். மியான்மர் சுற்றுப்பயணம் முடிந்ததும் மோடி நேற்று காலை ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். பிரிஸ்பேன் நகரில் ஜி - 20 உச்சிமாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி உலக பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தொடர்ந்து நாளை 16 ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் சிட்னி, கான்பெரா, மெல்போர்ன் நகரங்களில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆஸ்திரேலியா சுற் றுப்பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் டோனி அபாட்டுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆஸ்திரேலியா பாராளுமன்றத்திலும் மோடி உரை நிகழ்த்துகிறார். மெல்போர்ன் மைதானத்தின் 161 ஆண்டு தினத்தையொட்டி நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மோடி தொடங்கி வைக்கிறார். சிட்னியில் ஒலிம்பிக் பூங்காவில் இந்தியர்களிடையே மோடி உரையாற்றுகிறார். 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பின்னர் 19ம் தேதி மோடி பிஜூ தீ வுக்கு செல்கிறார். 1981ம் ஆண்டுக்கு பிறகு பிஜீ நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மோடியுடன் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவும் செல்கிறது. பிஜி சுற்றுப்பயணம் முடிந்ததும் மோடி டெல்லி திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்