முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை: முத்கல்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, நவ.18 - ஐபிஎல் 2013- டி-20 கிரிக்கெட் போட்டிகளின் போது நடந்ததாகக் கூறப்படும் மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முத்கல கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், ஐபிஎல் சூதாட்ட விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சீனிவாசன் செயல்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, புக்கிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஆட்டத்தின் முடிவுகளை, போக்குகளை முன் கூட்டியே மாற்றியமைக்கும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று முத்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்கல் கமிட்டியின் 35 பக்க விசாரணை அறிக்கையில் சில பகுதிகளை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது.
சீனிவாசனுக்கு மேட்ச் பிக்சிங்கில் தொடர்பில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு மற்றும் சீனிவாசனுக்கு சூதாட்டம் நடைபெறுவது குறித்து அறிந்திருந்தும் அதனை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் கவனம் கொண்டுள்ளது.
ஐ.பி.எல். தலைமைச் செயலதிகாரி சுந்தர் ராமனுக்கு புக்கிகள் தொடர்பு இருப்பது தெரியும். ஒரு சீசனில் 8 முறை அந்த புக்கி இவரைத் தொடர்பு கொண்டுள்ளதாக முத்கல் அறிக்கை தெரிவித்துள்ளது.
மெய்யப்பனின் சூதாட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியே அவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்