முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் மாநாட்டில் இந்திய காரை நவாஸ் பயன்படுத்த மாட்டார்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ 18 - நேபாள தலைநகர் காத்மண்டுவில் வரும் 26,27ம் தேதிகளில் 2 நாட்கள் தெற்காசிய கூட்டமைப்பு(சார்க்) நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சார்க் மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும் ஏற்பாடுகளை நேபாளம் செய்து வருகிறது. இதற்காக குண்டு துளைக்காத அதி நவீன கார்களை தருமாறு இந்தியாவிடம் நேபாளம் கேட்டது. அதன் பேரில் மத்திய அரசு 6 குண்டு துளைக்காத கார்களை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளது. நேபாளத்திடம் 2 குண்டு துளைக்காத கார்கள் உள்ளன. எனவே இந்தியா அனுப்பி உள்ள 6 கார்களையும் சேர்த்து 8 கார்களையும் 8 நாட்டு தலைவர்களுக்கு பயன்படுத்த நேபாளம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா கொடுத்துள்ள குண்டு துளைக்காத காரை பிரதமர் நவாஸ் ஷெரீப் பயன்படுத்த மாட்டார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதோடு நவாஸ் ஷெரீப் காத்மண்டுவில் பயன்படுத்த புதிய கார் ஒன்றை நேபாளத்துக்கு பாகிஸ்தான் அனுப்பி உள்ளது. இதற்கிடையே சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை ஒன்று நேபாளத்துக்கு சென்றுள்ளது. இது தவிர பிரதமர் மோடி பயன்படுத்துவதற்காக இரண்டு சொகுசு கார்களை நேபாளத்துக்கு இந்தியா அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்