முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சேலம், நவ 18 - கர்நாடகாவில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103 அடியை எட்டியது.

இதையடுத்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. கடந்த வாரம் மழை நின்றதால் மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மழை வந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 103 அடியை நேற்று காலை தாண்டியது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 103.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் அதிகளவில் தண்ணீர் இருப்பதால் பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும். இதனால் அணையின் நீர்மட்டமும் உயரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்