முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தொழில் நுட்ப கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வறுமை ஒழிப்புக்கு திறமையான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றுடன் தமிழக அரசு நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..
.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 8.8.2014 அன்று சட்டசபையில் ஜெயலலிதா அவை விதி 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். வறுமை ஒழிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த ஒரு கொள்கை வகுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற மாசாசூöட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு நிலையத்துடன் இன்று (நேற்று) தமிழக அரசு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட் டுள்ளது. கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் மதிநுட்ப மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வாலர்கள் மூலம் உருவாக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் ஹார்வர்டு, ஏல், லண்டன் பொருளா தார பள்ளி உள்பட பல்வேறு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் 100 பேராசிரியர்கள் இணைந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி அமைப்பு 44 ஆண்டுகளாக வருவாய் நோக்கை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், வறுமையை ஒழிக்கவும் அறிவித்த திட்டங்களை கொண்ட விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கும்.
புதிய திட்டங்களை நிறைவேற்று வதை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் இந்த அமைப்பு உதவி செய்யும். இது தொடர்பாக அந்த அமைப்பு ஆய்வுகள் நடத்தும். முதல் கட்டமாக திட்டம், மேம்பாடு, சிறப்பு முயற்சிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மூன்று துறைகளில் இந்த அமைப்பு தனது ஆய்வை மேற்கொள்ளும். அதன் அடிப்படையில் தேவைப்படும் உதவிகளையும் தேவைகளையும் வழிமுறைகளையும் இந்த அமைப்பு தமிழக அரசுக்கு உதவிடும்.
வறுமையை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நவீன முயற்சிகள் மேற்கொண்டு இருப்பது குறித்து லத்தீப் ஜமீல் அமைப்பின் இயக்குனர் டாக்டர் எஸ்தர் டுபளோ பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தங்களுக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் திட்ட மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும், லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு சார்பில் தெற்காசியாவுக்கான அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சோபினி முகர்ஜியும் கையெழுத்திட்டனர்.
தமிழக அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், நிதித்துறை முதன்மை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு அமைப்பு சார்பில் டாக்டர் இக்பால் தலிவால், சி.வி.கிருஷ்ணன், ஜான் ப்ளோரட்டா, ஜாஸ்மின் ஷா, அபர்ணா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து