முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்சாபந்தன் நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் பிரதமருக்கு குழந்தைகள் ராக்கி கயிறு கட்டினர்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை,சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்சா பந்தன் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடிக்கு குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர். சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்சா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது.

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், கொண்டாடப்படும் ரக்சாபந்தன் திருவிழா இந்து பண்டிகை என்றாலும் கூட, இது மதங்களையும் தாண்டிய நேசத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்பதால் தற்போது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று ரக்சாபந்தனை முன்னிட்டு பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர்.

திருமணம், கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்திருந்தாலும் இந்த நாளில் சகோதர சகோதரிகளை பாசத்துடன் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து