முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

கொழுப்பை கரைக்க

தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரும்.

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

புதிய இனம்

அமெரிக்காவின் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சுமார் 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்பிளட்டோசரஸ் ஹார்னரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதியவகை டைனோசரின் உடலமைப்பு, முதலைகள் போன்று இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தினமும் ஒரு கோப்பை தேநீர்

இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago