முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூண்டின் பயன்

குழந்தைகள் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளில் 2 துளி விட்டால் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

தூக்கம் தான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது

பலரும் உறக்கத்தை வெறுமனே ஓய்வெடுப்பதற்கான இன்டர்வெல்லாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உறக்கமா நாம் அறியாத பல விசயங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த நிலையில் உறங்குகிறீர்கள் என்பது தான் உங்களது ஆளுமையை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் கிரிஷ் இட்ஷிகோவிஸ்கி கூறுகையில், கருவில் இருப்பதை போல உறங்க விரும்புபவர்கள் பார்க்க கடினமானவர்களாக தோன்றினாலும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகிறது.

குரங்குக்கு டயட்

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்றை கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதன் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து,  15 கிலோவாக இருக்கும் அதன் எடையை குறைக்க டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் ஓட வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.

நீச்சல் குளம்

இத்தாலியில் 42 மீட்டர்‌ ஆழம் கொண்ட நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் கொல்லி இகானி பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட பல நீச்சல் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனியும், ஆவணியும் சொன்ன சேதி

பாமா விஜயம் என்ற படம், இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய படம். அதில் பாடல் ஒன்றில், ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அந்த பாடல் சொல்லும் சுவராஸ்யமான சேதி ஒன்று உண்டு. கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டியில் பிறந்தவர். அந்த ஊருக்கு அருகிலேதான் நமது கோவில் நகரம் மதுரை உள்ளது. அந்த நகரில் தெற்கு ஆவணி மூல வீதி உள்ளது. அந்த வீதியில்தான் நகரின் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. அதை குறிக்கும் வகையிலேயே கண்ணதாசன்  ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என குறிப்பிட்டு இருப்பார். இது போன்ற எண்ணற்ற  வாழ்வியல் சுவராசியங்களை திரை மறைவு ரகசியமாக கண்ணதாசன் குறிப்பிட்டு இருப்பார்.

பயத்தை போக்க...

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago