முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளைச் சாம்பா (Mapillai Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு வழக்கிழந்த நெல் வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது, தனது தன்மையின் பெயரே உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டது.  மாப்பிள்ளை சம்பா அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்தின் போது உண்ண வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும். மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

கோப்பையின் மதிப்பு

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது.

அர்த்தகடி சக்ராசனம்

சக்ராசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது. முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. பாதத்திற்கும் நல்லது.

அலாரம் ஸ்டிக்கர்

பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க ஒரு ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் அணியும் உள்ளாடை உள்ளிட்ட எதன் மீதும் ஒட்டிக்கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனை மையமாகக் கொண்டு செயல்படும் இதை, தவறான நோக்கத்தில் யாராவது தொட்டால், குறிப்பிட்ட 5 நபர்களுக்கு இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும்.

பிரிட்டன் ராணி எலிசபெத்தை விட பணக்கார இந்திய பெண்

இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரி‌ஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார். ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ 460 மில்லியன் அமெரிக்க டாலர். தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர். இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள 9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago