முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மெகா விமானம்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன், உலகின் மிகப்பெரிய விமானத்தைக் கட்டமைத்துள்ளார். ஸ்ட்ரேடோலாஞ்ச் என்னும் இந்த இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் உள்ளது. 226 டன் எடை கொண்ட இது, 28 சக்கரங்கள், 6 ஜெட் எஞ்சின்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.

வெறும் வயிற்றில் ....

காலை வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் மற்றும் குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்புகளை சாப்பிட்டால் இன்சுலின் அளவை அதிகரிக்கும். தயிர் சாப்பிட்டால் அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

மலையில் தொங்கும் விடுதி

மனிதன் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவன். அதிகமாக சாகச விரும்பி. இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இயற்கையோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு அதை வெல்ல வேண்டும் என ஓயாத மன அரிப்பை கொண்டிருப்பதால் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என்கிறோம். அதை வெல்ல வேண்டும் உந்துதலால் எதையாவது செய்து கொண்டிருப்பதால் சாகச விரும்பி ஆனான். அதற்கு சிறந்த உதாரணம் பெரு நாட்டில் உள்ள தொங்கும் விடுதி. அது என்ன தொங்கும் விடுதி. பெருவில் உள்ள மச்சு பிச்சு என்ற உலக அதிசய இடத்துக்கு செல்லும் வழியில் கஸ்கோ என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி உயரத்தில் மலைக்குன்றில் ஒட்ட வைத்தது போல சுமார் 300 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் விடுதி அறைகளை கட்டியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரிசார்ட்டுக்கு கம்பி  வழியாக தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அங்கிருந்து பெருவின் அழகை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மலை மற்றும் வான் மேகங்களின் அழகை ரசிக்கலாம்.. ஆனால் நமது உடலும் இதயமும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.. என்ன பெருவுக்கு போகலாமா..

அண்டார்டிகா துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் செய்த முதல் இந்திய பெண்

அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான  ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது.  செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago