முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நியூஇயர் கொண்டாட

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.

புதிய இனம்

அமெரிக்காவின் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சுமார் 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்பிளட்டோசரஸ் ஹார்னரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதியவகை டைனோசரின் உடலமைப்பு, முதலைகள் போன்று இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

உலகுக்கு ஆபத்தான விண்கல்

4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வந்தது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது.

உலகிலேயே குறைவான மழை பொழியும் இடம் எது?

உலகிலேயே மிகவும் குறைவாக மழை பொழியும் இடம் பாலைவனம் என நீங்கள் கருதினால் அது தவறு.. உண்மையில் மழை குறைவாக பெய்யும் இடம் துருவ பிரதேசமான அண்டார்டிகாவில் தான் மழை பொழிவு குறைவு. அங்கு ஆண்டுக்கு 6.5 அங்குலம் மட்டுமே மழை அல்லது பனி பொழிகிறது. அதே நேரத்தில் கொலம்பியாவில் உள்ள லோரோ என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 அங்குலத்துக்கும் அதிகமாக மழை பொழிகிறது.

விண்வெளியில் தயார் செய்யப்பட்ட ஓர் இசை ஆல்பம் எது தெரியுமா?

ஒரு விண்வெளி வீரருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. விண்வெளியில் இருக்கும் போதே இசை அமைத்தால் என்ன.. அவ்வாறு இசை அமைத்ததை ஓர் ஆல்பமாக வெளியிட்டால் என்ன... கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரரான செர்ரிஸ் ஹேட்பீல்டு என்பவர்தான் கடந்த 2015 இல் அப்படி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 144 நாட்கள் தங்கியிருந்து 11 பாடல்களை அங்கேயே பதிவு செய்தார். Space Sessions: Songs for a Tin Can என்ற பெயரில் அந்த ஆல்பம் வெளியானது. அதே நேரத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரினும் விண்வெளியில் இருந்து ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் பதிவு செய்யப்படவில்லை. அதுதான் விண்வெளியிலிருந்து பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago