இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அரை கிலோ கிராமுக்கு எடை குறைவான உறுப்புதான் இதயம். இதன் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காததனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவே, இதற்கு பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாப்பதால்தான்.
உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறியும் முறையாக, சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.
ஆளில்லா தானியங்கி விமானங்களும், வழக்கமாக வானில் இயக்கப்படும் மற்ற விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க சென்ஸ்ஃப்ளே (SenseFly) என்ற நிறுவனத்தின் சார்பில் இதற்கான செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
எதிர்கால இமெயில் அனுப்பும் வசதிகளை தருவதில் LetterMeLater என்ற இந்த வசதிதான் சிறப்பாக செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும்.உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும்.பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்
நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


