முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குரூப் காலிங் வசதி

மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம். வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.

இதயத்திற்கு பலம்

சிலருக்கு சாக்லெட் போன்ற இனிப்புகளை தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இனிப்புகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமானவதுடன், பற்களில் சொத்தை விழும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கோகோ சாக்லெட் இனிப்புகளை சாப்பிடுவதால்  நல்ல மகிழ்ச்சி நிலை ஏற்படுவதுடன், இதயம் நல்ல முறையில் இருக்கும் என தற்போதைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.கோகோ நிறைந்த சாக்லெட்டுகள் இதய ரத்தக்குழாய்களுக்கு  நல்ல நண்பனாக திகழ்கின்றன. இதனால் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு இதயபாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

16-ம் நூற்றாண்டிலேயே....

எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

செயற்கை நாக்கு

ஜெர்மனியில் உள்ள ஹெய்டெல் பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் போலி விஸ்கியை கண்டுபிடிக்க முடியும். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரம், பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் எங்குள்ளது தெரியுமா?

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago