முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

வினோத மக்கள்

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.

அதிசய பெண்

எல்லா ஹார்ப்பர் எனும் பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை ஆர்த்தோபெடிக் நிலையால் கால் மூட்டு பின்பக்கமாக திரும்பியது. இதனால் இவர் கால்களை முன்னாள் மடக்கும் வகையில் உருவ நிலை மாற்றம் கொண்டார். இதனால் இவரை ஒட்டக பெண் என அழைத்தனர்.

சிறிய பாடலை ஆட்களின் பெயராக கொண்ட அதிசய கிராமம் தெரியுமா?

மனிதர்களுக்கு பெயரிடுவதுதான் உலகம் முழுவதும் உள்ள மனித இனத்தின் கலாச்சார அடையாளமாக இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது. ஒருவரது பெயரை வைத்தே நாடு மொழி தேசம் இனம் கலாச்சாரம் பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு மனித குல அடையாளங்களையும் கண்டறிந்து விட முடியும். ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் என தனித்த பெயரிடல் முறைகளும், பெயர்களும் உள்ளன. அவ்வாறு பெயர் சூட்டுவதற்கென தனி சடங்குகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. ஒரு சிறிய சுட்டு விளிப்பாக பெயரிடுவதுதான் பொதுவாக உலக வழக்கு. ஆனால் ஒரு சிறிய பாடலை ஹம்மிங் செய்வது போல பெயரிடும் விசித்திர கிராமம் உள்ளது என்பது தெரியுமா.. அதுவும் அந்த கிராமம் உலகில் வேறு எங்கோ அல்ல.. இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தான் உள்ளது. காங்தோங் என்றழைக்கப்படும் அழகிய மலைக்கிராமத்தில்தான் ஓவ்வொருவர் பெயரும் அழகிய சிறிய பாடலைப் போன்ற ஹம்மிங்கை கொண்டது. நாலைந்து பேர் சேர்ந்து ஒருவர் பெயரை மற்றொருவர் தொடர்ச்சியாக சொல்லக் கேட்டால் நாம் நிஜமாகவே ஒரு பாடலைத் தான் கேட்கிறோமோ என்ற ஆச்சரியம் ஏற்படும். மேலும் உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தூய்மையான மலைக் கிராமம் என்ற ஐநாவின் பட்டியலிலும் இந்த இந்த ஊர் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. தாளாதா ஆச்சரியம் தானே..

பறவைகளும் பாட கற்றுக் கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

பறவைகள் எவ்வாறு பாட வேண்டும் எனக் கற்றுக் கொள்வதில்லை; யாரும் அதற்கு கற்று கொடுப்பதும் இல்லை. இது அவற்றுடன் பிறந்த ஒர் இயற்கைப் பண்பாகும். ஆனால் அதே நேரத்தில் பறவைகளால் இசையைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதும் உண்மையல்ல. சில பறவைகள் பிற பறவைகளின் ஒலியைக் கற்றுக் கொள்வதும் உண்டு. மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசையைக் கற்றுக்கொண்டு இனிமையாகப் பாடும். கிளிகள் மனிதர்களின் தொடர்பினால் சில சொற்களைக் கற்றுக்கொண்டு பேசுவதை நாம் அறிவோம்.

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago