முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

கல்லால் செய்யப்பட்ட பழம்பெரும் நாதஸ்வர கருவி

தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்:  தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

கொம்புக்காக வேட்டை

காண்டா மிருகம் வேகமாக அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் இருக்கிறது. அதன் கொம்புகள்தான். சீனாவிலும்,  வியட்நாமிலும் காண்டா மிருகத்தின் கொம்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஒரு கிலோ காண்டா மிருக கொம்பின் விலை ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட  அதிகம். இந்த கொம்பு ஆண்மையை அதிகரிப்பதாகவும், புற்றுநோயை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அது அதிகம் கொல்லப்படுகிறது.உண்மையில் இதன் கொம்பில் ஆண்மைக்கான சமாச்சாரம் எதுவும் இருக்கிறதா என்றால் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை. நமது நகத்திலும், காண்டா மிருக கொம்பிலும் ஒரே வகையான மூலப்பொருட்கள் தான் உள்ளன.

இப்படியும் வினோதம்

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யப்படுகிறது. ஆனால் அவர் விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.

ஏ.கே.47 துப்பாக்கி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது

இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago