முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொசுக்கு எதிரி கொசு

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசுக்கு எதிரான போரட்டத்தில் கொசுக்களையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் ஜிகா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம் ஜிகா, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மறுத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஜிகா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம் எது தெரியுமா?

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஆரோக்கியம் தரும்

நாம் சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அவற்றில் மஞ்சள் மிகவும் முக்கியம். இது நம் உடலுக்குச் சிறந்த மருந்து. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாற்றை சரி செய்யும். அடுத்து லவங்கப்பட்டை. இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும். பூண்டு, இதய நோய் வராமல் தடுக்கும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் திறன் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. வெந்தயம், நெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

முத்திரையிட பயன்படும் அரக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

முந்தைய காலங்களில் மூடி சீலிடுவதற்கும் அவற்றில் அரசாங்க முத்திரை இடுவதற்கும் அரக்கு என்ற  பொருளை பயன்படுத்துவது வழக்கம். இன்றைக்கும் ஜப்தி செய்யப்பட்ட இடங்களை நீதிமன்ற ஊழியர்கள் பூட்டி விட்டு அதன் மீது துணியை சுற்று அரக்கால் சீல் வைப்பதை நாம் பார்த்திருக்கலாம். மேலும் இந்த அரக்கு உணவு பண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவற்றுக்கு நிறமேற்றம் செய்யவதற்கும், பர்னிச்சர் பொருள்களை செம்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதெல்லாம் சரி.. இது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா... இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் மரங்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினத்தில் இருந்துதான் இந்த அரக்கு பெறப்படுகிறது. இதன் பெண் பூச்சிகள் உருவாக்கும் திரவம்தான் பசை போல இறுகி பின்பு அரக்காக மாறுகிறது என்றால் ஆச்சரியம் தானே.

ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால்..

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும். அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago