பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.
தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகமான கேமராவான 15 ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும். ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும். அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...
சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள், தனக்கு குழந்தை வேண்டும் என்றால், தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளுமாம். இதற்கு காரணம், தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால்தான்.
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


