முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில்லி தக்காளி பன்னீர்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சில்லி தக்காளி பன்னீர் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய பன்னீர் - 200 கிராம்.
  2. தக்காளி - 3.
  3. பச்சை மிளகாய் - 3.
  4. சீரகம் - 1 ஸ்பூன்.
  5. பூண்டு - 6  பல்.
  6. இஞ்சி - 1 துண்டு.
  7. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்.
  8. கலர் பொடி - ஒரு சிட்டிகை. 
  9. நெய் - 2 டீஸ்பூன்.  
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3.
  11. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2.
  12. மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.
  13. மல்லித்தூள் - 1 டீஸ்பூன். 
  14. சோயா சாஸ் - 1 டீஸ்பூன்.  
  15. கார்ன் பிளவர் மாவு - 1 டீஸ்பூன். 
  16. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் 3 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், பூண்டு 6 பல், ஒரு துண்டு இஞ்சியை பொடியா நறுக்கி போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 200 கிராம்  பன்னீரை எடுத்துக்கொண்டு அதில்  மிக்சியில் அரைத்த மசாலா கலவையை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையெனில் சிகப்பு கலர் பொடி ஒரு சிட்டிகையை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்றாக கலந்து விட்டு ஒரு மணி நேரம் பன்னீரை ஊற வைக்கவும்.
  4. மிக்சி  ஜாரில் பொடியாக நறுக்கிய 3 தக்காளியை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன்  3 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  6. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 குடைமிளகாய் ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் மிக்சி  ஜாரில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை  ஊற்றி நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் மசாலா கலந்து ஊறவைத்த பன்னீரை போட்டு வதக்கவும்.
  8. ஒரு டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கலந்து விட்டு நன்றாக வதக்கவும்.
  9. இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
  10. சுவையான சில்லி தக்காளி பன்னீர் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago