முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2026      இந்தியா
Kashmir-Snow--2026-01-24

ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மலைப்பாங்கான மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் ஜம்மு நகரம் உள்பட சமவெளிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் நகரம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவை சந்தித்துள்ளது, இது உள்ளூர்வாசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்பன், பாரமுல்லா, பதோத், தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரஜோரி, ரியாசி, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்தது.

பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் 5 அங்குலம் முதல் ஒரு அடி வரை பனி குவிந்துள்ளது. வடக்கு காஷ்மீரில் 300 பனி அகற்றும் எந்திரங்கள் மூலம் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக 26 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையான 270 கி.மீ. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பனிஹால்-காசிகுந்த் பகுதியில் நவ்யுக் சுரங்கப்பாதையில் பனிப்பொழிவு காரணமாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கியும், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து