எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை. மாமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல் பேரில் செய்திருக்கிறார்கள் என்று மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, கடந்த 125 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் இங்கிருந்து வாங்கி சென்று சில்லறை விற்பனை கூடங்களில் விற்கும் அளவிற்கு பெரிய அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கூடமாக செயல்பட்டு வந்தது. முதல்வர் ஆணைப்படி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஹவுஸ் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு இருந்த ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.53 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் மக்கள் பணிக்கு முழுவதும் கொண்டுவரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வரும் கழிவுகள் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் முன்பு இங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அது தற்பொழுது நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வடிகால் பகுதியில் கொசுவலை மாநகராட்சி ஊழியர்கள் வைப்பது போன்ற காணொளி வெளியானது குறித்த கேள்விக்கு, மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட விஷயம் இது கிடையாது. அது கொசுக்களுக்காக போடப்பட்டது இல்லை மாமன்ற உறுப்பினர் கொடுத்த யோசனை பேரில் செய்திருக்கிறார்கள் இது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


