முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாசிபருப்பு அல்வா

Cooking time in minutes: 
20
Ingredients: 

பாசிபருப்பு அல்வா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பாசி பருப்பு - 1/2 கப்.
  2. வெல்லம் - ஓரு கப்.
  3. கோதுமை மாவு - 2 ஸ்பூன். 
  4. கலர் பொடி - ஒரு சிட்டிகை 
  5. நெய் - 6 ஸ்பூன். 
  6. முந்திரிபருப்பு - 10.
  7. ஏலக்காய் பொடி - சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாயை வைத்து 1/2 கப் பாசி பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை  நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்,வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மீதமுள்ள நெயில் 2 ஸ்பூன் கோதுமைமாவை போட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து 2 கப்  தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த பாசிபருப்பை  போட்டு 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து சிறிது நேரம் ஆற விட்டு  பின்னர் பாசிபருப்பை மிக்சியில் போட்டு   அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து ஒரு கப் வெல்லம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்,வெல்லம் கரைந்து பாகு பதம் வந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் மிக்சியில் அரைத்த பாசிபருப்பை  போட்டு கிளறி விடவும்,இதனுடன் வறுத்து வைத்துள்ள 2 ஸ்பூன் கோதுமைமாவையும் போட்டு  நன்றாக கிளறி விடவும்.
  7. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகு,பொடி செய்த 2 ஏலக்காய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி குறைவான தணலில் தொடர்ந்து அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
  8. தேவையெனில் சிகப்பு கலர் பொடி ஒரு சிட்டிகையை தண்ணீரில் கரைத்து பாசிபருப்பு அல்வாவில் சேர்த்து கலந்து விடவும்.
  9. இதனுடன் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விட்டு,வறுத்த முந்திரி பருப்பையும் போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பாசிபருப்பு அல்வா ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்