முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாசி பருப்பு பாயாசம்

Cooking time in minutes: 
30
Ingredients: 

பாசிபருப்பு பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள்;

 1. பாசிபருப்ப - 1 கப்.
 2. வெல்லம் -  1,1/2  கப்.
 3. நெய் – சிறிதளவு.
 4. முந்திரி பருப்பு – 6.
 5. தேங்காய் துருவல் – சிறிதளவு.
 6. பால் -  தேவையான அளவு.
 7. நாட்டு சர்க்கரை - 1 ஸ்பூன்.
 8. உப்பு - 1 சிட்டிகை.

Method: 

 

செய்முறை ;

 1. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு கப் பாசி பருப்பை போட்டு பிரவுன் கலர் வரும் வரை நன்கு வறுக்கவும்.
 2. அடுப்பில் குக்கர் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த பாசிபருப்பு மற்றும் ஒரு சிட்டிகை உப்புபை போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
 3. அடுப்பில் கிடாய் வைத்து சிறிதளவு நெய் ஊற்றவும்.
 4. நெய் சூடானவுடன் 6 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
 5. வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 6. மீதமுள்ள நெயில் சிறிதளவு தேங்காய் துருவல் போட்டு வறுக்கவும்.
 7. சிறிது நேரம் ஆற விட்டு அதை மிக்சியில் போட்டு  அதனுடன் முந்திரி பருப்பை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
 8. குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பு நன்கு வெந்து உள்ளது,அதை மீண்டும் லேசாக சூடுபடுத்தி அதில் வெல்லம்  ஒன்னரை  கப் மற்றும் நாட்டு சர்க்கரை ஒரு  ஸ்பூன் போட்டு கலந்து விட்டு  குறைவான தணலில் அடிபிடிக்காமல் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
 9. மிக்சியில்அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் முந்திரி பருப்பை போட்டு கலந்து விடவும்.
 10. சிறிதளவு பால் ஊற்றி கலந்து விடவும்.
 11. வறுத்த முந்திரி பருப்பை போட்டு கலந்து விடவும்.
 12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 13. சுவையான பாசிபருப்பு பாயாசம் ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!