Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026      தமிழகம்
EPS 2023-02-23

சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட 10,000 -க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்து வருகிறார்.

அவ்வாறு நேற்று 3-வது நாளாக நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இ.பி.எஸ். பேசுகையில், "அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி இணையவுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி) ஆகியோர் இணைந்துள்ள நிலையில் புதிதாக இணையவுள்ள கட்சி எது? என பரபரப்பு கிளம்பியுள்ளது. தே.மு.தி.க., பா.ம.க. (ராமதாஸ் தரப்பு), ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து