முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டைகோஸ் கட்லெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டைகோஸ் கட்லெட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. முட்டைகோஸ் - 600 கிராம்.
  2. முட்டை - 4.
  3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 3.
  4. பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல். 
  5. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  6. சீரக தூள் - ½ ஸ்பூன்.
  7. அரிசி மாவு - 25 கிராம்.
  8. கார்ன் பிளவர் மாவு- 25 கிராம்.
  9. சிகப்பு மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  10. மிளகு தூள் – 2 ஸ்பூன்.
  11. எண்ணெய் – 3 கரண்டி.
  12. உப்பு -தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை  வைத்து  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய 600 கிராம் முட்டைக்கோஸை போட்டு இதனுடன் ½ லிட்டர் தண்ணீர் ஊற்றி  முட்டைக்கோஸை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. வேக வைத்த முட்டைக்கோசில் உள்ள நீரை வடி கட்டி முட்டைக்கோஸை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஒரு கரண்டி   எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. வேக வைத்த முட்டைகோஸ் உள்ள பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  6. இதனுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்,சீரக தூள் ½ ஸ்பூன்,அரிசி மாவு 25 கிராம்,கார்ன் பிளவர் மாவு 25 கிராம்,சிகப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 2 ஸ்பூன்  மற்றும் தேவையான அளவு  உப்பு போட்டு வதக்கி வைத்துள்ள பூண்டு மற்றும்  பெரிய வெங்காய கலவையையும் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து  2  கரண்டி   எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் சிறிதளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago