முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரவா பர்பி

Cooking time in minutes: 
10
Ingredients: 

ரவா பர்பி செய்யத்தேவையான பொருட்கள்.

  1. ரவை -  2 கப்.
  2. நெய் – 2 ஸ்பூன்.
  3. சர்க்கரை - ஒரு கப்.
  4. ஏலக்காய் தூள் – 5 கிராம்
  5. எண்ணெய் – சிறிதளவு.
  6. முந்திரி பருப்பு -10.
Method: 

செய்முறை ;--

அடுப்பில் கடாயை வைத்து 2 கப் ரவை மற்றும் 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி ரவையை  நன்றாக வறுக்கவும்.

இதனுடன் ஒரு கப் சர்க்கரையை போட்டு நன்றாக கலந்து விடவும்.

இதனுடன் 5 கிராம் ஏலக்காய் தூளை போட்டு நன்றாக கலந்து விடவும்.

இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ரவை கெட்டியாக வரும்வரை  நன்றாக கலந்து விடவும்.

ஒரு தட்டில் சிறிதளவு எண்ணெய்யை தடவி,வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு பரப்பி விட்டு ரவா பர்பியை நன்றாக ஆற வைத்து10 முந்திரி பருப்பை தூவி தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.

சுவையான ரவா பர்பி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்