Idhayam Matrimony

3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      இந்தியா
Jail

திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வான ராகுல் மாம்கூட்டத்தில் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கருக் கலைப்பு என இரு வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், முதல் வழக்கில் அவருக்கு கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலத் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, இரண்டாவது வழக்கிலும் ராகுலுக்கு முன்பிணை வழங்கி திருவனந்தபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பாலியல் வழக்குகள் காரணமாக ராகுலை கட்சியிலிருந்து காங்கிரஸ் நீக்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராகுல் மாம்கூட்டத்தில் மீது மூன்றாவது வழக்காக பத்தனம்திட்டாவை சேர்ந்த ஒருவர் பாலியல் புகார் அளித்தார். மூன்றாவது வழக்கில்தான், ஒரு விடுதியில் தங்கியிருந்த ராகுல் மாம்கூட்டத்திலை சனிக்கிழமை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே உள்ள இரு வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து