எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முன்னணியில்...
பிரதம் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பாதிப்புகள்...
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனைதங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் முதல்வர் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
வழிவகுத்து வருகிறது...
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி "எக்கியராஜ்ய" (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திம்பு கோட்பாடுகள்...
இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில், இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்); வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது(தமிழர் தாயகம்); தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும் மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல் போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதல்வர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மீண்டும் மோதல்களுக்கு....
இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆழமான தாக்கத்தை...
இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் , இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கம்...
இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உரிமைகளைப் பாதுகாக்க...
இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், தமிழ்நாடு முதல்வர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
இன்றைய நாள் எப்படி?
11 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் மரஉறியில் ராமர் திருக்கோலமாய் காட்சி.
- ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.


