முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

இந்த பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி இல்லாததால் ரகானே கேப்டனாக செயல்பட்டார்.கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் 36 ரன்களும், அகர்வால் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த புஜாரா சதம் அடித்தார். ஆனால் கேப்டனான ரகானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோகித் சர்ா 68 ரன்களும், ரிஷப் பந்த் 33 ரன்களும் சேர்த்தனர்.விஹாரி 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்க, இந்தியா முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி 37 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து