தீபாவளி பண்டிகைக்கு மறு நாளும் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      தமிழகம்
Diwali-children 2019 10 21

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு  ஆணையிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக   கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக  சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, தீபாவளியை மகிழ்ச்சியுடன்  கொண்டாட பண்டிகைக்கு மறுநாள் அக்டோபர் 28-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும்  உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென தலைமை செயலக ஊழியர்கள் வேண்டுகோள்  விடுத்தனர்.

அதனை ஏற்று தமிழக அரசு வரும் 28-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ளுர் விடுமுறை வழங்க வேண்டுமென அரசாணை வெளியிட்டுள்ளது. 28-ம் தேதி அரசு நிறுவனங்கள்,  பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும்  வகையில் நவம்பர் 9-ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பணிநாளாக அறிவித்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. 26-ம் தேதி சனிக்கிழமை, 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 28-ம் தேதி திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பண்டிகை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி  பண்டிகையை மக்கள் முன்னிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து